காப்பீடு துறையில் உள்ள மென்பொருள் வேலை வாய்ப்புகள் | Ingu velai kidaikum
http://suga-employment-services.blogspot.in/2017/07/insurance-software-jobs-in-tamil-by.html
இன்சூரன்ஸ் சாப்ட்வேர் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றி திரு சுகவனம் அவர்கள் காவேரி நியூஸ் டிவி க்கு அளித்த கலந்துரையாடல் :
நிருபர் ராமகிருஷ்ணன் : இது புது துறையாக உள்ளது. சாப்ட்வேர் துறையினாலும் எல்லாருக்கும் தெரியும். இன்சூரன்ஸ் துறையினாலும் எல்லாருக்கும் தெரியும். ஆனா நீங்க இன்சூரன்ஸ் சாப்ட்வேர் துறை அப்படினு சொல்றீங்க. இது என்ன மாதிரியான துறை என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் இதில் உள்ளது?
சுகவனம் : இந்த சாப்ட்வேர் துறையை பார்த்தீங்கன்னா நம்ம இந்தியாவுல பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. சாப்ட்வேர் துறை வளர்ச்சி ரொம்ப வருஷமாவே இருக்கு. 1960லிருந்து தொடர்ந்த வளர்ச்சி உள்ளது. ஆரம்பத்துல பார்த்தீங்கன்னா ஐஐடி (I.I.T - Inian Institute of Technology) மாணவர்கள் அமெரிக்கா சென்று சாப்ட்வேர் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சாங்க 1970இல் தொடர்ந்த வளர்ச்சி வந்தது. 1980இல் இந்தியாவில் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் வர ஆரம்பிச்சது. அப்படி வந்ததுதான் இன்போசிஸ் Infosys, டி சி எஸ் - TCS (Tata Consultancy Services) போன்ற நிறுவனங்கள். அந்த மாதிரி பார்த்தீங்கன்னா இன்னிக்கி லட்சக்கணக்கான பேர் இந்தியாவுல சாப்ட்வேர் நிறுவனங்கள்ல வேலை பார்க்கிறாங்க. இந்தியாவுல மட்டும் 2000 க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள் இருக்கு. பெரிய நிறுவனங்கள் முதல் பத்து இருபது நிறுவனங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனா சிறிய நிறுவனங்கள் பல இருக்கு. இவங்கல்லாம் வெவ்வேறு துறைக்கான சாப்ட்வேர் உற்பத்தி பண்ணி தராங்க. அந்தந்த துறைல அதற்குண்டான தேவை அதிகமா இருக்கு. இன்சூரன்ஸ் துறைக்கு உண்டான சாப்ட்வேர் எப்பிடின்னு பார்த்தீங்கன்னா இப்ப நம்ம இந்தியாவுல சாப்ட்வேர் ஏற்றுமதி மூலமா 2 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை அந்நிய செலாவணி வருது.
www.sugaconsulting.in
No comments:
Post a Comment